Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 20 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.ஹனீபா, பாறுக் ஷிஹான்
திருக்கோவில், விநாயகபுரம் கடலோரக் கிராமத்தில் நேற்று (19) திடீரென கடல் அலை உட்புகுந்ததால் கரையிலிருந்த 25 படகுகள் அள்ளுண்டு சென்றுள்ளன. எனினும், பலத்த முயற்றியுடன் அந்தப் படகுகளை மீனவர்கள் மீட்டுக் கரை சேர்த்துள்ளனர்.
தகவலறிந்து குறித்த இடத்துக்பு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து மீனவர்களிடம் வினவியதுடன், மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். அவருடன், உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதீஸ்கரனும் உடன் சென்றிருந்தார்.
இந்தக் கடல் சீற்றம் காரணமாக, விநாயகபுரம் பிரதேசத்தில் 75 மீன்படிப் படகுகளைக் கொண்டு, வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் 150 மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், திருக்கோவில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ள மீன்பிடிப் படகுகள் தொடர்பாக, மீன்பிடித் திணைக்களத்தின் ஊடாக சேத விவரங்கள் திரட்டவுள்ளதாக, அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை - காரைதீவு பிரதேசத்திலும் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர் புகுந்துள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் சக பிரதேச சபை உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago