2025 மே 12, திங்கட்கிழமை

‘35 நாள்களின் ஆயுள் முடியும்’

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதம் 16ஆம் திகதி இரவு, மஹிந்த ராஜக்‌ஷ தலைமையிலான மொட்டுக் கட்சியின் அரசாங்கம் மலருமென, அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீமல வீர திசாநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் இன்னும் 35 நாள்களின் முடிவடையுமெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்துக்கான தேர்தல் பிரசார அலுவலகம்,  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.புஸ்பகுமார் இனிய பாரதியின் தலைமையில் நேற்று (14) இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,“ஐக்கிய தேசியக் கட்சியின் நல்லாட்சி அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் நான்கரை வருடங்களை கடந்து வந்துள்ள போதும், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் தமிழ்த் தலைவர்களால் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

“ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்து கொண்டு, முஸ்லிம் மக்களுக்கான அனைத்த விடையங்களையும் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

“எனினும், தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை, மஹிந்த ராஜபக்‌ஷ வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X