2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

38 வருட பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வு

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழிப் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தின், தனது 38 வருட பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றில் அரபு மொழி விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளராக, துறைத் தலைவராக, பீடாதிபதியாக, பேராசிரியராக சுமார் 38 வருடங்கள் கடமையாற்றிய இவர், 2019 செப்டம்பர் 30ஆம் திகதியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.

மருதமுனையைச் சேர்ந்த  பேராசிரியர், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X