Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றப்பட்டியல், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளமான www.eastpde.edu.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய தகுதியான ஆசிரியர் சங்கங்களின் பங்கேற்புடன் இவ்விடமாற்றப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
43 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பட்டியலின்படி, 422 ஆசிரியர்கள் வலயங்களுக்கிடையில் இடமாற்றம் பெறுகிறார்கள். குறிப்பாக, மட்டு.மேற்கு வலயத்திலிருந்து 128 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு ஆக 03 ஆசிரியர்களே அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களது இடமாற்றம், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி அமுலாகின்றதென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
மாகாண இடமாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், மேன்முறையீடு செய்யவிரும்பினால், இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பதாக அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளருடாக மாகாண கல்வித் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026