2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

500 மாணவர்க்கு கற்றலுபகரணங்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களுக்கு, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய வசதி குறைந்த  குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் 500 பேரைத் தெரிவு செய்து, கற்றல் உபகரணங்கள் பொதிகள் வழங்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஊடாக, இலங்கை தொழில் திணைக்களத்தின் உதவியுடன், “சிரம வாசனா” நிதி அமைப்பின் ஒத்துழைப்போடு இவை வழங்கப்படுகின்றன.

அதன் ஓர் அங்கமாக, காரைதீவு பிரதேச செயலகத்தில் 6 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம், பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன் தலைமையில்  பிரதேச செயலக கேட்போர கூடத்தில், நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்டச் செயலாளர்  வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X