2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

9 வயது சிறுவனை வல்லுறவுக்கு உட்படுத்திய 33 வயதான நபருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கல்முனை மருதமுனை பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 33 வயது ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

மருதமுனை, மேட்டுவட்டை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள 33 வயது ஆண் ஆதே வீட்டுத்திட்டத்தில் உள்ள 9 வயது சிறுவனை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் அருகிலுள்ள களப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன், உடன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாலியல் துஸ்பிரயோம் செய்தவர் தலைமறைவாகிய நிலையில் நேற்று புதன்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X