R.Tharaniya / 2025 நவம்பர் 20 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கத் தலத்தில், சட்ட அனுமதி இன்றி ஞாயிற்றுக்கிழமை(16) அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை, அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து அன்றிரவே, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, திங்கட்கிழமை (17) பிற்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.
பௌத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்பிற்கு மத்தியில் புத்தர் சிலையைத் துறைமுக பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் அகற்றினர். இந்த விவகாரம் பேசும் பொருளாகியுள்ளது என்பதுடன், இனவாதத்தைத் தூண்டி அதற்கு எண்ணெய் வார்த்து அந்தத் தீயில் குளிர்காய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
‘’இனவாதம் என்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகள் கையிலெடுக்கும் மோசமான செயலாகும். இனவாத அரசியலுக்கு இனிமேல் இடமளிக்க மாட்டோம்’’ என வடக்குக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையிலேயே, திருகோணமலை புத்தர் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
இந்த பிரச்சினையை அடுத்து, பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமென வலியுறுத்தின. அத்துடன், தேசியப் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு வடக்கு, கிழக்கில் இராணுவ வசமிக்கும் காணிகளை எக்காரணங்களுக்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (19) அன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, திருமலை புத்தர் சிலைப் பிரச்சினை முடிந்து விட்டது என்றும், இனி இனவாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
எனினும், திருகோணமலைக்கு அதிரடியாக விஜயம் செய்திருந்த பௌத்த பிக்குகள், பௌத்தத்தை பாதுகாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். திருகோணமலையில் புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டமைக்கு பௌத்த பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
எப்படியாவது இந்த ஆட்சியைக் குழப்பிவிடவேண்டுமென்ற நோக்குடன் செயற்படும் ஒருசிலர், திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தைப் பூதாகரமாகி அதில் குளிர்காய்ந்து, அரசாங்கத்துக்கு, பௌத்தர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
ஆகையால்தான், உண்மையான பௌத்தர்கள், இந்த விவகாரத்துக்குத் துணைபோக மாட்டார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான
நீதவான் எம்.என்.எம். சம்சுதீன் விஹாராதிகாரி தேரருக்கு புதன்கிழமை (19) அன்று உத்தரவிட்டார்.
எனினும், வடக்கு, கிழக்கில் அதட்டாக நிர்மாணிக்கப்படும்
பௌத்த விகாரைகள் தொடர்பில் கடந்த காலங்களில் நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டமை தெரிந்தது.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago