Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனினும், நாளைமுதல் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வோர். இன்று மட்டும் என கூறி மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர்.
மதுவிலக்கு சட்டவிரோதப் பயன்பாட்டை உருவாக்குகிறது என்றாலும், இது உடல்நல பாதிப்புகள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் சமூகச் சீர்கேடுகளைத் தடுக்க உதவுகிறது. அமெரிக்காவில் 1920களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது, இது சட்டவிரோத சமுதாயத்தை அதிகரித்தது.
மதுபானங்கள் சமூகத்தின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதாகக் கருதப்படுவதால், சமூக சீர்திருத்தவாதிகள் மதுவிலக்கைப் பரிந்துரைக்கின்றனர். மதுபான பயன்பாடு உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை உருவாக்குவதால், பொதுநலத்தைக் கருதி மதுவிலக்கு கொண்டுவரப்படுகிறது.
பல சமயங்கள், குறிப்பாக இஸ்லாமிய மதங்கள், மதுபானத்தைத் தடை செய்துள்ளன, இது மதுவிலக்குக்கு வழிவகுக்கிறது. குடிப்பழக்கம் குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கு இந்த பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்காவில் 1920 முதல் 1933 வரை மதுவிலக்குச் சட்டம் அமுலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பும் கடத்தலும் அதிகளவில் நடந்தன. இந்தியாவில் குஜராத், பீகார் போன்ற சில மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது.
உலகின் 13 இஸ்லாமிய நாடுகளில் மதுபானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மதுவிலக்கு சட்டவிரோத மதுபான கடத்தல், குற்றச்செயல்கள் அதிகரிப்பு மற்றும் மதுபான ஊழல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். மதுவிலக்கு, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடிப்பழக்கம் போன்றவற்றை குறைக்க உதவும். இது வன்முறை மற்றும் சமூக அமைதியின்மை போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, சமூக அமைதியை மேம்படுத்துகிறது.
வருடாந்தம் மதுபான பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய
10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மதுபான பாவனை முன்னனி காரணியாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள்
தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மதுபாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியமான UNDP நடாத்திய ஆய்வின்படி, இலங்கையில் மதுசார பாவனைக்கான சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 237 பில்லியன் ரூபாயாக இருந்தன, அதே ஆண்டின் மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற கலால் வருமானம் 181.1 பில்லியன் ரூபாய் மாத்திரமே ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.
மதுவிலக்கை இன்று (ஓக்டோபர் 03) ஆம் திகதி மட்டுமே அனுஷ்டிக்காது, முழு மதுவிலக்கு அதுவே இலக்காக இருக்கவேண்டும். எனினும், அது இலங்கையில் சாத்தியப்படாத ஒரு விடயமாகும்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago