2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கட்டும்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகவாழ் தமிழர்கள், இந்துக்கள், இன்றையதினம், இனிய தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடும் செய்யும் நாளாக இதனை போற்றுகின்றோம்.

நரகா சுரன் எனும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்லுகின்றன. அந்த நரகாசுரனையே, மனதின் தீமைகளோடு ஒப்பீடு செய்கின்றனர். 

இன்றைய தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவதற்கான, முன்னேற்பாடுகளை பலரும் கடந்த பல நாட்களில் இருந்தே செய்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தப்படுத்தல், வர்ணங்களை பூசுதல், புத்தாடைகளை கொள்வனவு செய்தல், இனிப்பு பண்டங்களை தயாரித்தல் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். அந்தளவுக்கு இந்த பண்டியை தமிழர்களிடத்தில் விசேடமான பண்டிகையாக கொண்டாப்படுகின்றது. 

எனினும், தங்களுடைய பொருளாதார நிலைக்கு ஏற்றவகையில்,  ஆடம்பரமின்றி, கடனாளி ஆகிவிடாது, மிகவும் எளிமையான முறையில் கொண்டாடும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி விளையாடி விட்டது. இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது. 

இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா, பீஜி தீவு, மலேசியா, மொரீசியஸ், இந்தோனேசியா, நேபாளம், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் வெகு விமர்சையாக இந்த தீபாவளி பண்டியை கொண்டாப்படுகின்றது.

ஆக, உலகத்தில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம், தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. 
நமது நாட்டை பொறுத்தவரையில்,  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று  பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும்” எனும் தலைப்பின் கீழ்,நாட்டு மக்களுக்குத் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகத் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.எனினும், புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்றெல்லாம் கூறப்படுகின்றது. 

தீபாவளி தினமான இன்று (ஒக்டோபர்20) அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புக்கள் நிறையச் செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீப ஒளித் திருநாளன்று 
பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

அவ்வாறு கொளுத்தும் போது, ஏனையோருக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், காயங்கள் ஏற்படாத வகையிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பதுடன், தீப திருநாளான இன்று (20) வீடுகளில் ஏற்றப்படும் ஒளியைப் போன்று, தங்களுடைய ஒவ்வொருவரின் மனங்களிலும் தீமை இருள் நீக்கி, தூய்மை எண்ணங்களைப் பரவச் செய்வோம் என வலியுறுத்தும் அதேவேளை, அனைவருக்கும் எமது தமிழ்மிரர் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X