2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை 04ஆம் திகதி காலை நடைபெறவிருக்கிறது.

இந்த உற்சவம் கடந்த 18 நாட்கள் பகல் இரவுத் திருவிழாக்களாக நடைபெற்று வருகிறது.

 நான்காம் (04)தேதி தீர்த்த உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .