2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

கண்ணகி அம்மன் ஆலய பாக்குத்தெண்டல் உற்சவம் ...

R.Tharaniya   / 2025 மே 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்கவற்றாப்பளை கண்ணகிஅம்மன்ஆலயபொங்கல் உற்சவத்தின் ஆரம்பநிகழ்வு பாக்குத் தெண்டல் உற்சவம் திங்கட்கிழமை (26) சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவை தெரியப்படுத்தும் முகமாக ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது அமைந்துள்ளது.

இந் நிலையில் திங்கட்கிழமை (26) அதிகாலை ஒரு மணிக்கு அம்மன் சன்னிதானத்தில் இடம் பெற்ற பூஜை வழிபாடுகள் தொடர்ந்து பாக்குத்தொண்டலுக்கு ஆலயத்துடன் தொடர்புடைய குறித்த வீடுகளுக்கு   சென்றவர்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்குஅம்மன் சந்நிதானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த வகையில் எதிர்வரும் ஆனி 02 ஆம் திகதி கடல் நீர் தீர்த்தம் எடுத்தல் உற்சவமும் அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு இடம்பெறவுள்ளது.

காட்டா விநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் எதிர்வரும் ஆனி 08 ஆம் திகதி இடம் பெறவுள்ளதோடு ஆனி 09ஆம் திகதி வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது .

சண்முகம் தவசீலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X