Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள சீரடி சாய் நாத சரணாலயத்தில் புதன்கிழமை (06) மாலை 4:00 – 06:00 மணிவரை கிருஷ்ண ஜெயந்தி நடைபெறவுள்ளது.
மாலை 4:00 மணிக்கு சிறுவர் சிறுமிகள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வாக கிருஷ்ணனின் பலவித உருவப்படங்களுக்கு நிறந்தீட்டல், வினாவிடைபோட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ வரதாரஜ விநாயகர் ஆலயத்திலிருந்து பால கிருஷ்ணனை மேளதாளத்துடன் ஊர்வலமாக சாய் சரணாலயத்திற்கு சிறுவர்கள் அழைத்து வருவார்கள். தொடர்ந்து வரும் தொட்டிலிடல், தாலாட்டு பாடல் நிகழ்வில் பக்த அடியாhர்கள் எல்லோரும் கலந்துகொள்ளலாம்.
மாலை 5:15-5:30 வரை கிருஷ்ண பகவானுக்கு துளசி அர்ச்;சனையும் (பக்த அடியார்கள்; தங்கள் கரங்களினால் கிருஷ்ண பகவானை அர்ச்சனை செய்யலாம்). கிருஷ்ணாவுக்கு பிடித்த பிரசாதம் லட்டு, வெண்ணெய், முறுக்கு, சீடை போன்ற பிரசாதம் நைவேத்தியமும் செய்யப்படும். தொடர்ந்து 5:30 – 6:00 மணிவரை பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான உரியடித்தலில் சிறுவர், சிறுமிகள் பங்குபெறுவர். முடிவாக 6:00 – 6:30 வழமையான சீரடி சாயி மாலை ஆரத்தியுடன் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
5 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago