2025 மே 10, சனிக்கிழமை

சூசையப்பர் ஆலய 100​ ​ஆண்டு விழா

R.Tharaniya   / 2025 மே 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை (2)  கோலாகலமாக ஆரம்பமாகியது .

1925 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த புனித சூசையப்பர் ஆலயத்தின்  நூற்றாண்டு விழா, வெள்ளிக்கிழமை (2)   அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இவ் விழா எதிர்வரும் 11 ஆம் தேதி திருப்பலி பூஜையுடன் நிறைவுபெறவிருக்கிறது. ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அடிகளாரின் தலைமையில் முதல் நாள் கொடியேற்றத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் அருட்தந்தை அம்புறோஸ் மறையுரை ஆற்றினார் . ஆலய முதல் நாள் நிகழ்வில் அவ்வட்டாரத்துக்கான தலைவி யுவராஜினி  ஆதி நாயகம் நன்றி உரையாற்றினார்.

திருமதி வேர்ஜினி பிரசாட் மன்றாட்டு வழங்கினார். நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் அங்கு கலந்து கொண்டு கொடியேற்ற திருவிழாவிலும் ஏனைய நிகழ்வுகளில் பங்கு பற்றினார்கள்.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X