R.Tharaniya / 2025 மே 18 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் மிகப் பிரமாண்டமாக சனிக்கிழமை (17) அன்று மாலை 5 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானது 155 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இம்முறை கொடியேற்றமானது மிகவும் பிரமாண்டமான ரீதியில் சிறப்பாக இடம் பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.
கொடியேற்றமானது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி, திருச்செபமாலை யுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை அமிர்தராஜ் அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பங்குத் தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பு.கஜிந்தன்




04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025