Janu / 2023 ஜூலை 17 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டைய நடைமுறைகள்,தெய்வீக ஆற்றல்கள் நிறைந்த,தமிழ்நாடு அம்பாள் உபாசகர் ராஜகுரு ஸ்ரீல ஸ்ரீ சிவமோகா மகராஜ் சுவாமிகள் வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் 36 வது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவத்தில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (18) இலங்கை வருகின்றார்.
மந்திரம் , தந்திரம்,யந்திரம் மற்றும் ஒளதம் பற்றிய அவரது அறிவு,இந்த நவீன காலத்தில் இணையற்றது. அவர் தசமஹாவித்யா தேவியிடமிருந்து பிரபஞ்ச சக்தியை தினமும் பெறுகிறார். அடியார்களின் தடைகளையும்,எதிர்மறை சக்திகளையும் அகற்றி அருள்பாலிக்கின்றார்.
அனைத்து உயிரினங்களுக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய அவரது போதனைகள் மகத்தானவை. சமய நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள சுவாமிஜி ஒவ்வொரு செயலிலும் அன்பையும் சகோதரத்துவத்தையும்,காருண்யத்தையும் வழங்கிவருகின்றார். திட்ட மேலாண்மை மற்றும் மூலோபாய திட்டமிடல் துறைகளில் நிபுணத்துவமிக்கவர். அவர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெற்றியை அடைய உதவுகிறார். அவரது தனித்துவமான அணுகுமுறை மற்றும் அறிவுபூர்வமான ஆற்றல் சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்றவை.
முகம் படித்தல்,வாஸ்து மற்றும் அங்க சாஸ்திரம் துறையில் சுவாமிஜி தேர்ச்சி பெற்றவர். மக்கள் தங்களை மற்றும் சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்ள அடியார்களுக்கு உதவுகிறார். உண்மையிலேயே அசாதாரணமான கணிப்புகள் மற்றும் வழிகாட்டுதலுடன் பக்தர்களை நெறிப்படுத்துகின்றார். ராஜ குரு ஸ்ரீல ஸ்ரீ சிவமோகா மகராஜ் சுவாமிஜி,வேதம்,தர்மசாஸ்திரத்தில் ஆழ்ந்த புலமைமிக்கவர். அவரது போதனைகள் ஒளி மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்கள்,சத்தியத்தையும் ஆன்மீக செழிப்பையும் தேடும் அனைவருக்கும் காத்திரமானவை. ஜூலை 23ம் திகதி வரை இலங்கையில் சுவாமிகள் தங்கி இருப்பார்கள்.

9 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025