Mayu / 2026 மார்ச் 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மறைமாவட்டத்திற்குற்பட்ட தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழா, (22) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவிழா நிகழ்வுகள் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானதுடன் நிகழ்வுக்கு வருகை தந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை, நுவரெலியா சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை முழங்க, பங்கு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை எல்வின் பீட்டர் பெர்னாண்டோ அடிகளாரின் தலைமையில் இத்திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

"ஆண்டவர் உங்களுடன் இருக்கட்டும், அவருடைய ஒளி உங்களை வழிநடத்தட்டும்" எனும் புனித பத்திரிசியாரின் உயரிய சிந்தனைக்கு அமைவாக இத்திருப்பலி இடம் பெற்றது.
இத் திருவிழா திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி ரன்ஜித லக்ஷான் அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குருவான அருட்பணி பாலா ராஜேந்திரம் அடிகளார் ஆகியோருடன் அருட்சகோதரிகள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவின் நிறைவில் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், விசேட ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து மக்களும் மதிய உணவுகள் பங்கு மக்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொட்டகலை நிருபர்
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago