2025 மே 01, வியாழக்கிழமை

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி நிகழ்வு

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா  சிவராத்திரி நிகழ்வு  புதன்கிழமை (25) இடம்பெற்று வருகின்ற  நிலையில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்த வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ​மேலும் சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை புதன்கிழமை (26) அதிகாலை தொடக்கம் செலுத்தி வருகின்றனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .