2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

திருப்பதி ஆலய நிர்வாகிகள் சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்

Janu   / 2023 ஜூன் 25 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தின் நிர்வாகிகள் ஜந்து பேர் கொண்ட குழவினர் புதன்கிழமை  (25)  காலை சீதையம்மன் ஆலயத்திற்கு  வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

வருகை தந்த குழுவினரை ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட்ட நிர்வாக சபை ஊறப்பினர்கள் வரவேற்றனர்.

இதன்போது திருப்பதி வெங்கடாசலபதி நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் நிர்வாக சபை உறப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியாவில் இருந்து அதிக பக்தர்களை வரவழைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கலை கலாச்சார பரிமாற்றங்களை செய்து கொண்வது தொடர்பாகவும் பேசப்பட்டதுடன் வருகை தந்த குழுவினருக்கு ஆலயத்தின் சார்பாக பொன்னாடை போர்;த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

டி.ஷங்கீதன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X