R.Tharaniya / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் செவ்வாய்க்கிழமை (23) அன்று மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
வியாழக்கிழமை (25) அன்று மகாபாரதம் ஏடு திறந்து மகாபாரத பாராயணம் செய்தல் நிகழ்வு ஆரம்பமாகும்.
ஞாயிற்றுக்கிழமை (29) அன்று திங்கட் கிழமை சுவாமி எழுந்தருளப் பண்ணனும் செவ்வாய்க்கிழமை (30) நாட்கால் வெட்டுதலும் நடைபெறும்.
தொடர்ந்து சனிக்கிழமை(04) அன்று கல்யாணக்கால் வெட்டுதலும் (08) அன்று வனவாசம் (09) அன்று தவநிலை இடம்பெற்று வெள்ளிக்கிழமை (10)அன்று மாலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற இருக்கின்றது .
சனிக்கிழமை (11) பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவு பெறும். தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவது வழமையாகும்.





வி.ரி.சகாதேவராஜா
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago