2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தீமிதிப்பு மகோற்சவம்.

Freelancer   / 2023 ஜூன் 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

 காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

 தொடர்ச்சியாக 10 நாட்கள் சடங்குகள் இடம்பெற்று 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீமிதிப்பு வைபவம் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ்  தலைமையிலே சடங்கு நடைபெறும்.

பூஜைகள் தினமும் பகல் 12 30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் மா.கணேசலிங்கம் தெரிவித்தார்.

 16ஆம் திகதி காலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும். 20ஆம் திகதி  இரவு அம்மன் முத்துச்சப்ரத்திலே ஊர்வலம் வருகின்ற நிகழ்வு இடம்பெறும். 23ஆம் திகதி  காலையில் மஞ்சள் குளித்து தீமிதிப்பு இடம்பெறும். பகல் அன்னதானம் இடம் பெறும் என செயலாளர் கணேசலிங்கம் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X