R.Tharaniya / 2025 ஜூன் 08 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஞ்சதல ராஜகோபுரத்திற்கான மகாகும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா ஞாயிற்றுக் கிழமை (08) அன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
முதல் தடவையாக 121 அடி நவதல சோழர்காலத்து பரம்பரையில் அமைக்கப்பட்ட ராஜ கோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு பிரதமகுரு சிவஸ்ரீ கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
கடந்த நான்காம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து ஆறாம் ஏழாம் திகதிகளில் எண்ணெய் காப்பு இடம் பெற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (08) காலை விநாயகர் வழிபாடு , விசேட பூஜைகள் தொடர்ந்து, நாட்டியாஞ்சலி இடம் பெற்று வேதபாராயணம், முழங்க மங்கள வாத்தியம் இசைக்க,ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகராகோஷத்துடன் பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க உலங்குவானூர்தியில் இருந்து அம்மாளுக்கு பூச்சொரிய ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.
வி.சக்தி








5 minute ago
22 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
28 minute ago
30 minute ago