R.Tharaniya / 2025 ஜூன் 22 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அராலி மேற்கு ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 5ஆம் திருவிழாவான சனிக்கிழமை (21) அன்று முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் பேச்சி அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் முத்துச் சப்பரத்தில் எழுந்தருளி யாக வீற்றிருந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. ஆலயக் கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
கடந்த 17.06.2025 அன்று ஆரம்பமான திருவிழாவானது 25.06.2025 அன்று வேள்வி உற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்







6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026