R.Tharaniya / 2025 ஜூன் 26 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (25) அன்று சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் பேச்சி அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆலயக் ஆலயத்தின் வேள்வித் திருவிழா கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.





பு.கஜிந்தன்
4 minute ago
16 minute ago
39 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
39 minute ago
51 minute ago