Mayu / 2024 ஜூன் 26 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (25) வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் பேச்சியம்மாள் மங்கல வாத்தியம் முழங்க, பக்தர்கள் புடைசூழ, குதிரை வாகனத்தில், மயிலாட்டம் , ஒயிலாட்டம், குதிரையாட்டம் என்பவற்றுடன் வலம்வந்து, அராலி மத்தி பேச்சியம்மாள் ஆலயத்தில் வேட்டையாடினாள்.
கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
பு.கஜிந்தன்





21 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 Oct 2025