Freelancer / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்றகல்முனை மாநகர் நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நாளை ஆறாம் திகதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.
நாளை மறு நாள் 7ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் என்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும் .
இங்குள்ள விசேஷம் என்னவென்றால் எண்ணெய் காப்பாக அம்மனுக்கு வேப்பஞ்சாறு சாத்துவது வழமையாகும்.
தொடர்ந்து 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.19 மணி முதல் 10.41 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளது.
இதனைதொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 20ஆம் திகதி 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகம் இடம்பெறும் .
பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
வி.ரி. சகாதேவராஜா
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago