Janu / 2026 மே 04 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா அண்மையில் பக்திபூர்வமாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிள்ளையார் வழிபாடுகளைத் தொடர்ந்து, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நாகபூசணி அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
பூஜைகளைத் தொடர்ந்து, அம்பாள் உள்வீதியூடாக வலம்வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். முதலாவது தேரில் பிள்ளையாரும், இரண்டாவது தேரில் முருகப் பெருமானும் வலம்வர, மூன்றாவது பெரிய தேரில் நாகபூசணி அம்பாள் எழுந்தருளி வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


























































20 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago