Ilango Bharathy / 2022 ஜனவரி 23 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், துவாரக்ஷன்
நுவரெலியா - அக்கரப்பத்தனை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா (23) இன்று நடைபெற்றது.
கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து நேற்றைய தினம் (22) எண்ணெய் காப்பு நடைபெற்றதோடு இன்று காலை மஹாகும்பாபிஷேக பெருச்சாந்தி பெருவிழா நடைபெற்றது.



சிவஸ்ரீ.சிவகுகேந்திர குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஆர்.ராஜாராம், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

29 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
21 Dec 2025