2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீனாட்சி அம்மன் உற்சவ திருவிழா

R.Tharaniya   / 2025 மே 08 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான இவ் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாற்குட பவனி இடம் பெறும்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X