Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத் தொடர்ந்து வல்லிபுர பெருமான் பரிவார மூர்த்திகளுடன் காலை 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து வலம் வந்தார். தேருக்கு பின்புறமாக அங்க பிரதட்சை செய்தவர்கள், அடி அழித்தவர்கள், பஜனைக் குழுவினர்,கற்பூரச்சட்டி, காவடிகள் என அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
ஆஞ்சநேயர் முன்னேவர பரிவார மூர்த்திகளும் தேரில் வர மூன்றாவது வல்லிபுரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம் வந்தார்.
கடந்த 14.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆர்மபமான வருடாந்த உற்சவத்தில் 15 வது நாளான இன்று தேர் உற்சவம் இடம் பெற்றது.
இதேவேளை நாளை பிற்பகல் (29) வௌ்ளிக்கிழமை வல்லிபுரத்து ஆழதவாரின் சமுத்திர தீர்த்தமும், நாளை மறுதினம்(30) சனிக்கிழமை கேணி தீத்தமும் இடம் பெற்று திருவிழா நிறைவு பெறவுள்ளது.


5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago