2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஸம்ப்ரோக்ஷண விழா!

Janu   / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமகிருஷ்ண மிஷனின் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருக்கோவில் ஸம்ப்ரோக்ஷண விழா ஞாயிற்றுக்கிழமை (21)  சிறப்பாக நடைபெற்றுள்ளது .

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்  தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளத்துடன் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மிஷன் அபிமானிகள் பிரமுகர்கள் அறநெறி மாணவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர் .

வேத மந்திரங்கள், மங்களாரதி, அங்கு திருப்பள்ளியெழுச்சி ,கோயில் வலம், கொடியேற்றம், பூஜை, பஜனை, ஹோமம் ,சிறப்பு ஆரதி,  சொற்பொழிவு என்பன அதிகாலை முதல் இடம்பெற்றன.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X