2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் எரிக்கப்பட்ட சொக்கப்பனை

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா புதன்கிழமை (03) அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன்ஆரம்பமாகி, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, உள்வீதி வலம் வந்து, சொக்கப்பனைஎரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பிரம்மா விஷ்ணு அடிமுடி தேடிய புராண இதிகாச கதைகள் உடன் தொடர்புடையதாக, வருடா வருடம் கார்த்திகை திருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப் பூஜை வழிபாடுகள்யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நவரெத்தின முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குருமார் குழுவினர் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X