2025 மே 01, வியாழக்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாள் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா  கொழும்பு, கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும்.

26ஆம் திகதி திங்கட்கிழமை 5.30க்கு மங்கள ஆரத்தியுடன் ஆரம்பமாகும் இவ்விழாவில் தொடர்ந்து துளசி ஆரத்தி, தர்சன ஆரத்தி, குரு பூஜை, குழந்தை கிருஷ்ணருக்கு வலம்புரிச் சங்கினால் பால் அபிஷேகம்,  ஆராதனை, ராஜபோக ஆரத்தி, தூப ஆரத்தி, துளசி ஆரத்தி, சந்திய ஆரத்தியைத் தொடர்ந்து குழந்தைக் கிருஷ்ணரை தொட்டிலிலிட்டு தாலாட்டும் வைபவம் இடம்பெறும்.

இரவு 11.00 மணிமுதல் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு மஹா அபிஷேகமும், விஷேட ஆராதனைகளும், நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும்.

மறுநாள் 27ஆம் திகதி செவ்வாயன்று நண்பகல் 12.00 மணிக்கு ஸ்ரீவியாச பூஜை நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 6.30க்கு சந்தியா ஆரத்தியைத் தொடர்ந்து ஹரே கிருஷ்ணா இசைநாட்டியக்கல்லூரி மாணவ மாணவிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அபிஷேகத்துக்கு வேண்டிய பால், இளநீர், பழம், பூக்கள், மற்றும் அன்னதானத்திற்கு வேண்டிய சகல பொருட்களையும் பக்தர்கள் வழங்கலாம்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .