2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஓமான் மன்னர் கபூஸ் மறைவு: இந்தியாவில் நாளை துக்க தினம்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமானின் முன்னாள் மன்னர் கபூஸ் பின் சைட் அல் சைட் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளாக ஓமானை ஆண்ட முன்னாள் மன்னர் கபூஸ் பின் சைட் அல் சைட் நேற்று அவரது 79ஆவது வயதில் காலமானார். 1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த முன்னாள் மன்னர் கபூஸ் பின் சைட் அல் சைட் எண்ணெய் வளமிக்க ஓமான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

 

இதனைத் தொடர்ந்து முன்னாள் மன்னர் கபூஸ் பின் சைட் அல் சைட்டின் மறைவுக்கு இந்தியாவில் அரசு முறை துக்கம் நாளை அனுஷ்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசியக்கொடி அரைக்கம்பத்தில் நாளை பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்வுகள் எதுவும் நாளை நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .