2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சென்னை ,புதுவையில் கடும் பனி மூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகூர்,

பொதுவாக மார்கழி மாதத்தில் பனி மூட்டம் இருப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் கடைசியில் இருந்தே பனி மூட்டம் காணப்படுகிறது.

தற்போது மார்கழி மாதத்தில் பனி மூட்டம் அதிக அளவு காணப்படுகிறது.
சென்னை மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு 12 மணி முதல் கடும் பனி மூட்டம் இருந்து வருகிறது.

எதிரில் வரும் வாகன ங்கள் தெரியாத அளவுக்கு இது காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளைஒளிரவிட்டு செல்கின்றன.

இதேபோன்ற நிலைதான் புதுச்சேரி மாநிலம் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை என பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

இதனால் ஏற்படும் கடும் குளிரால் முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகா லையில் நடை பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

 பனி மூட்டம் அதிகமாக இருந்ததற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

சாதாரண சூழ்நிலையில் வெப்பநிலை கீழ் இருந்து மேலே செல்லும்போது குறையும். தற்போது வெப்பநிலை முரண் (டெம்பரேச்சர் இன்வெர்‌‌ஷன்) ஏற்பட்டு கீழ் இருந்து மேலே செல்லும்போது வெப்பநிலை அதிகமாகி உள்ளது.

நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை இந்த சூழ்நிலை நிலவும். அதனால் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.

சூரிய வெளிச்சம் நிலத்தில் படத்தொடங்கியதும், மீண்டும் பழைய சூழ்நிலைக்கு வந்து விடும். குளிர்காலத்தில் இது ஏற்படுவது வழக்கம். இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை இருக்கும்.

வருகிற 8ஆம் திகதிக்குப் பிறகு கிழக்குத் திசைக் காற்று நமக்கு குறைவதால் அந்த நேரத்தில் பனிமூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வருகிற 15ஆம் திகதி வரை அந்த நிலை நீடிக்கும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .