2026 மார்ச் 07, சனிக்கிழமை

அண்ணனின் பிறந்த நாளில் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 09 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா: ஸ்ரீநகரில் சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி பலியான சம்பவம், பலரையும்

கவலைக்குள்ளாக்கியுள்ளது.

அதா யாசிர் மிர் என்னும் 4 வயதான சிறுமியே, இவ்வாறு சிறுத்தையின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளார்.

 குறித்த சிறுமி தன் சகோதரனின் பிறந்த நாள் விழா நாளான கடந்த வியாழனன்று தங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சிறுத்தையொன்று வந்து அச் சிறுமியை இழுத்துச்சென்றுள்ளது.

இது நடைபெற்று சில நிமிடங்களில் சகோதரன் அலியின் பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு, வீட்டுக்குள்ளிருந்த பெற்றோர், அச்சிறுமியை அழைத்தபோது அவள் அங்கு காணப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவளைத் தேடும்முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அடுத்த நாள் வெள்ளிக்கிழமையன்று அவளின் உடல் பகுதிகள் காட்டுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டன.

இந்நிலையில் ” இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதுபற்றி பலமுறை வன இலாகா அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று அப்பகுதி  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமியின் மரணம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .