Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விழுப்புரம் :
'அண்ணாமலை என்ன கடவுளா' என பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் பேசியது,தற்போது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் கலிவரதன். இவரை, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நாகப்பன், கையடக்க தொலைபேசியில் சில தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 20 பெண்கள் மற்றும் பா.ம.க.,வினர் 50துக்கும் மேற்பட்டோரை, திருமண விழாவுக்கு வரும் அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த கலிவரதன், 'அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது' என்றார். அதற்கு நாகப்பன், 'பசங்க ஆசைப்படுகின்றனர்' என தெரிவித்தார்.
பதில் அளித்த கலிவரதன், 'அவங்க கேட்பதற்காக நாம் செய்ய முடியாது. பதவிக்கு மரியாதை கொடுங்கள். நான் வந்தால் தான் கட்சியில் சேரணும். அண்ணாமலை என்ன கடவுளா. உனக்கு நான் கடவுளா, அவர் கடவுளா.'அப்பறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா, திருவண்ணாமலையை கூப்பிட்டு வான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னைவிட பெரிய ஆளு யாரும் கிடையாது' என்றார்.
இருவரும் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து, கலிவரதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'நான் எதையும் போனில் பேச விரும்பவில்லை' எனக் கூறி, அழைப்பை துண்டித்து விட்டார்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025