A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை திமுக அமைதி பேரணி இன்று நடைபெற்றது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அமைதிப் பேரணிக்கு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர். இந்த பேரணியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026