A.K.M. Ramzy / 2020 நவம்பர் 15 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்னா:
பிஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்ப ட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனையில் நிதீஷ் குமாரை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நிதீஷ் குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையின் இறுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை (ஜே.டி.யு) சேர்ந்த நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிஹார் முதல்வராக நிதீஷ் குமார் நாளை பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்த நிலையில், தற்போது நான்காவது முறையாக நிதீஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
30 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago