2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை

Freelancer   / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த நேரத்தில் நோயாளி கைபேசியை பயன்படுத்தியபடி இருந்துள்ளார்.

உத்தர பிரதேசின் லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனையிலேயே இந்த புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

லக்னோவை சேர்ந்த 56 வயதான ஹரிஸ்சந்திரா பிரஜாபதி என்பவர், கடுமையான தலைவலி, இடது கை மற்றும் கால்கள் பலவீனமான நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அவருக்கு ‘அவேக் கிரனியோடோமி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடிவு செய்தனர். இதன்படி, ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு தலையில் மட்டும் ‘அனஸ்தீசியா’ மருந்தை செலுத்தி உணர்விளக்க செய்தனர்.

தொடர்ந்து அவரை கைபேசியில் விளையாடவும், பேனாவை கையில் வைத்திருக்கவும் செய்த மருத்துவர்கள், காலை அசைக்க செய்தனர். இதன் மூலம் நரம்பை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து அதனை அகற்றினர்.

இதன் மூலம் நரம்பு பாதிப்பு ஏற்படும் பிரச்சினையை தவிர்க்க முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X