Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் கர்நாடகம் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உடல் உறுப்புகளை தானம் செய்ய பலரும் முன்வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டில் 70 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 143 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதில் தட்சிண கன்னடாவில் 72 பேர் உடல் தானம் செய்துள்ளனர்.
இதன்காரணமாக ஒட்டுமொத்தமாக சுமார் 397 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்கள் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருகின்றனர்.
இதனால் கர்நாடகத்தில் உடலுறுப்பு தானம் வெகுவாக அதிகரித்து வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் தெலுங்கானா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
3 hours ago