Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலையிலேயே மது குடிப்போரை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பணி செய்வோர் காலையில் மது குடிப்பதாகவும், அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மது குடித்துவிட்டு கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடச் சொல்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் முத்துசாமி சமூகநீதிதான் பேச வேண்டுமே தவிர, குடிநீதி பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார். நாற்றத்தை மறக்க மது என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை குடித்து வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்? என்றும் வினவினார்.
29 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago