2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் H1 P விசா

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவில் வேலை நிமித்தமாக குடியேற உதவுவது H1 P விசா. இந்த விசாவைக் கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்று ஒப்பந்த அடிப்படையில் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் 25 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் பலர் தங்கள் விசாக் காலக்கெடுவை அதிகரித்து நிரந்தர குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வெளிநாடுகளிலிருந்து திறமைமிக்க பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு துறைகளில் திறன்கொண்ட ஊழியர்களை பணியமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தற்போது ஜனநாயகக் கட்சி அங்கு ஆட்சிசெய்து கொண்டிருப்பதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலருக்கு அமெரிக்காவில் பணி செய்ய H1-P விசா தாராளமாக வழங்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் கொள்கைப்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி அமெரிக்காவின் பொருளாதாரத்தை அவர்கள் வளர்க்க உதவுவதால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .