Ilango Bharathy / 2023 மே 15 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில் இவ்வாறு மதம் சார்ந்த நிர்வாண சாமியார்களை வைத்து பூஜை செய்வது அதிர்ச்சி அளிக்கின்றது.
எனவே அரச அலுவலகத்திற்குள் அகோரியை வைத்து பூஜை செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026