2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அர்ஜூனுக்கு பா.ஜ.கவில் இணையுமாறு அழைப்பு

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 24 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

 ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு பாரதிய ஜனதா கட்சியில்  இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெீவித்துள்ளன.

நடிகர் அர்ஜூனை பாஜக தேர்வு செய்ததற்கு காரணம், தமிழகம், கர்நாடகம் என இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் என்பதே காரணமாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இயல்பாகவே நடிகர் அர்ஜூன் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் என்பதாலும் ஆன்மிக நாட்டமிக்கவர் என்பதாலும் அவர் பாஜகவில் இணைய மறுப்பேதும் கூறமாட்டாரென  கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சியில் இணையும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஆர்.கே.சுரேஷ்குமார், ராதாரவி, கவுதமி, இயக்குநர் பேரரசு, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே பாஜகவில் இருக்கின்றன.  

 இதேவேளை, நடிகர் அர்ஜூனுக்கு  அழைப்பு சென்றதாகவும் ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .