Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 13 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளி போர்த்தியபடி ஆண் ஒருவரின் சடலத்துடன் இளைஞர்கள் சிலர் ரயிலில் பயணித்த சம்பவம் திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த 9 ஆம் திகதி இருந்து திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ரயிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூர் ரயில் நிலையத்தில் கம்பளி போர்த்தியபடி நபர் ஒருவருடன் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்குரிய வகையில் குறித்த இளைஞர்கள் நடந்து கொள்வதை சிசிடிவி கெமரா மூலம் பார்த்த பொலிஸ் அதிகாரிகள், அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் குறித்த நபரின் பெயர் அர்பிந்த்ராய் (வயது 30) என்பதும் அவர் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவரை அருகில் இருந்தவர்கள் எழுப்பியுள்ளனர் எனவும் ஆனால் அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரின் தொலைபேசி மூலம் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் எனவும், இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும் படியும், தாங்கள் வந்து எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இளைஞர்கள் அர்பிந்த்ராயின் சடலத்தை எடுத்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துக் குறித்த இளைஞர்களிடமிருந்து சடலத்தை மீட்ட ரயில்வே பொலிஸார் ,திருப்பூர் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ரயிலில் சடலம் கொண்டுவரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
12 minute ago
27 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
42 minute ago
1 hours ago