Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் மாணவர்களின் பைகளில் ஆணுறை,கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மாணவர்கள் அனுமதியில்லாமல் பாடசாலைக்கு தொலைபேசி எடுத்துவருவதாக புகார்கள் எழுந்த நிலையில், குறித்த பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்களின் பைகளைப் பரிசோதித்தபோதே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதுமட்டுமல்லாது சில மாணவர்கள் தண்ணீர் போத்தலில் மதுபானம் கலந்து கொண்டு வந்திருந்தமையும் இதன்போது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசு,‘ 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மருந்து கடைகளில் ஆணுறை மற்றும் ஒயிட்னர், வலி நிவாரணி மாத்திரைகள் விற்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குறித்த கர்நாடக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பி.டி. கானாபுரா கருத்துத் தெரிவிக்கையில் ” கர்நாடகா முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது.
அனால் அது தற்போது மாணவர்களின் கைகளில் அதிகளவில் கிடைத்து வருகின்றது. இதனைத் தடுக்கவே புதிய சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
30 minute ago
35 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
39 minute ago
47 minute ago