A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது டில்லி:
சாந்திநிகேதனிலுள்ள விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்திலுள்ள தாகூர் இருக்கையில் அமர்ந்து அவரை அமித்ஷா அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் குற்றஞ்சாட்டியதற்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
திங்களன்று, லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சாந்திநிகேதனில் அமித்ஷா தாகூரின் நாற்காலியில் அமர்ந்து நோபல் பரிசு பெற்றவரை அவமதித்ததாக குற்றம் சாட்டினார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபையில் தவறான தகவல்களை வழங்கியதாக அமித்ஷா பதிலடி தந்தார். தான் தாகூரின் நாற்காலியில் அமரவில்லை, உண்மையில் நேருவும், ராஜிவ்வும் தான் தாகூரின் நாற்காலியில் அமர்ந்தார்கள் என்றார். ராஜிவ் தாகூரின் சோபாவில் அமர்ந்து டீ அருந்தியதாக புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.
இதற்கிடையே சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த விருந்தினர்களான நேரு, பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தற்காலிக நாற்காலியில் அமர்ந்துள்ளனர். அது தாகூரின் இருக்கை கிடையாது. இந்த உண்மை புகைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026