A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
முதல்வர், துணை முதல்வர் ஊழலுக்கு ஆளுனர் பக்கபலமாக உள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காததால், ஆளுனர் உரையை புறக்கணித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் பயன்பெற்றுள்ளது என ஆளுனர் தெரிவித்துள்ளார். ஆனால், அது தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளித்த லாலிபாப் எனக்கூறியிருந்தேன்.
2015ஆம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 2019இல், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், 2021ஆம் ஆண்டு ஆகியும் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதனால், தான் மத்திய பட்ஜெட் மூலம் தமிழக மக்களுக்கு அளித்த லாலிபாப் என விமர்சனம் செய்தேன்.பெட்ரோல், டீசல், வாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர்.
ஆளுனர் பேசும் போது, அமருங்கள் இது கடைசி பட்ஜெட் என தெரிவித்தார். இது தான் உண்மை. அதனை வரவேற்கிறோம். அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்.
அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் ஆளுனரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர், அமைச்சர்களுக்கு பக்கபலமாக, ஊழலுக்கு ஆளுனர் துணை நிற்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுனர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் ஆளுனர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago