2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில்,  ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 55 மணிநேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

ராஜஸ்தான் மாநிலம், தவுசா பகுதியில் அமைந்துள்ள கலிகாட் கிராமத்தில், கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில், வயலில் விளையாடிக்கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 

இதையறிந்த கிராம மக்கள், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் 2 நாட்களாக விடிய, விடிய ஈடுபட்டனர்.

முன்னதாக 150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிக்க வசதியாக ஆக்சிஜனை குழாய் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுவனின் ஒவ்வொரு அசைவு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க கமெராக்களை குழிக்குள் இறக்கி பொருத்தினர்.

இந்த நிலையில், கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி, 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், புதன்கிழமை (11) இரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டதுக்கு பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X