2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பரலியா கிராமத்தில்,ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில், குறித்த சிறுவனின் தந்தைக்கு சொந்தமான விவசாய நிலமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் வராததால் கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த சிறுவன், ஞாயிற்றுக்கிழமை (23) ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில்  விழுந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் 32 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிய நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், 16 மணிநேரம் தீவிர மீட்புப்பணிக்கு பின், திங்கட்கிழமை (24) அதிகாலை 4 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை உடனடியாக மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டமை தெரியவந்தது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X